Election 2026 Update : பாளையங்கோட்டை தொகுதி யாருக்கு? மக்கள் மனநிலையும் கள நிலவரமும்!
திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை தொகுதியில் இந்த முறை கடுமையான பலமுனை போட்டி நிலவுகிறது. இரயில்வே மேம்பாலம், சாலை வசதி, குடிநீர் மற்றும் வடிகால் பிரச்சனைகள் மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. சிறுபான்மை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.